நெல்லையில் தல தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது; புத்தாடைகள் உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் புதுமண தம்பதிகள் உற்சாகமோடு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடைகளும் பட்டாசுகளும் தான் எனவே கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் புத்தாடைகள் பட்டாசு போன்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர் தொடர்ந்து இன்று காலை முதல் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளுன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக புதுமணத் தம்பதிகள் இன்று தல தீபாவளி கொண்டாட்டத்தில் உற்சாகமோடு ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜா ராமலட்சுமி தம்பதியினருக்கு கடந்த மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது
எனவே இது தல தீபாவளி என்பதால் மகாராஜா தனது மாமனார் வீட்டிற்கு நேற்றே விருந்துக்கு சென்றார் இன்று காலை எண்ணெய் குளியலை முடித்துவிட்டு புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து தனது மனைவியுடன் உற்சாகமோடு தல தீபாவளியை கொண்டாடினார் முன்னதாக புத்தாடைகள் பலகாரங்கள் ஆகியவற்றை சாமி புகைப்படங்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்துவிட்டு தனது மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசி வாங்கிய பின் அவர்கள் கையால் புத்தாடைகளை பெற்றுக் கொண்டனர்
பின்னர் இனிப்புகள் பரிமாறியும் பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர் இதேபோல் பிற புதுமண தம்பதிகள் இளைஞர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் கொண்டாட்டத்தில் திகைத்துள்ளனர்.