தேனி அருகே கோலகலமாக தொடங்கிய மூன்றாவது புத்தகத் திருவிழா
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
இந்த புத்தகத் திருவிழா அரங்கில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கிராமியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் பங்கேற்கும் இலக்கிய மன்றமும் நடைபெறுகிறது.
மாலை 6 மணி முதல் கவிஞா்கள், எழுத்தாளா்கள், இலக்கியப் பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கு நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சின்னமனூர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் புலியாட்டமும் சிலம்பாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது அதேபோல் தேவராட்டமும் ஒயிலாட்டம் கரகாட்டம் நடைபெற்றது.
புத்தத் திருவிழா தொடக்க நிகழ்சியில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.