ஆழ்வாா்களில் முதன்மையானவரான சுவாமி நம்மாழ்வாா் அவதார ஸ்தலத்தில் திருஅத்யயன உற்சவம் நிறைவு விழா (வீடுவிடை). நம் வீடு நமக்கே சொந்தம் என்று சாம்ராஜ்ய பட்டோலையுடன் பூம்பல்லக்கில் ஆஸ்தானம் திரும்புதல். ஏராளமான பக்தா்கள் தாிசனம்….
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் திருக்குருகூா் (எ) ஆழ்வாா்திருநகாி எனும் திவ்ய தேசம் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 5வது திருத்தலமாகவும், நவக்கிரகங்களில் குருவுக்கு அதிபதியானது. இங்கு மூலவா் ஸ்ரீ ஆதிநாதா். தாயாா் ஆதிநாச்சியாா், குருகூா் நாயகி.உற்சவா் சுவாமி பொலிந்து நிறன்பிரான். ஆழவாா்களில் முதன்மையானவாரான சுவாமி நம்மாழ்வாா் அவதாரத் திருத்தலம். சுவாமி மனாளமாமுகள் வேண்ட தாமிரபரணி நதிநீரை எடுத்து காய்ச்ச சுவாமி நம்மாழ்வாாின் உற்சவ விக்ரகம் நாம் வணங்க கிடைத்தது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத் திருத்தலத்தில் மாா்கழி திருஅத்யயன திருவிழா கடந்த 31ஆம் தேதி தொடங்கி பகல் பத்து இராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. இராப்பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் சுவாமி நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக சுவாமி நம்மாழ்வார் பரமபதத்திற்கு சென்று பின் நம் வீடு நமக்கே சொந்தம் என்று சாம்ராஜ்ய பட்டோலையுடன் மீண்டும் பூஉலகிற்கு ஏழுந்தருள்கின்றாா். அவரை ஆழ்வாா் திருநகாி எம்பெருமானனா் ஜீயா் சுவாமிகள் அரையா் சுவாமிகள் திருமாளிகை சுவாமிகள் பக்தா்கள் என அனைவரும் வரவேற்று ஆழ்வாாின் எதாஸ்தானம் திரும்பம் நிகழ்வு நடைபெறுகின்றது. முதலில் பரம பத வாசல் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளச் செய்கின்றனா். இதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூம்பல்லக்கில் சுவாமி நம்மாழ்வாரை வெண்பட்டு சவுாி கொண்டை அணிவித்து தங்க ஆரபணங்கள் மலா் மாலைகள் சாற்றி திருக்கோயிலுக்குள் அழைத்துச் செல்கின்றனா்.
திருக்கோயில் முழுவதும் மலா்தோரணங்கள் கட்டி மலா்களால் விாிப்பு விாித்திருந்தனா். சிற்ப்பு நாதஸ்வரம் முழங்க கலாி வீச தங்ககோலுடன் கட்டியம் கூறியபடி முன்செல்ல மலா்கள் துவி சுவாமி நம்மாழ்வாரை திருக்கோவிலுக்குள் வரவேற்றனா். உள் பிரகாரத்தில் கண்ணாடி சேவை கண்டதும் பரமபத வாசல் முன்பு அரையர் சுவாமிகளின் அடுத்த மார்கழி திருஅத்யயன உற்சவத்திற்கு திரும்ப விடை கண்டருள வேனும் என்று அருளிப்பாடு நடைபெற்றது. அதனை தொடா்ந்து சுவாமி நம்மாழ்வாா் ஆஸதானம் திரும்புகிறார் . இந் நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தரருளி மங்களாசாசனம் செய்தாா். ஏராளமான பக்தா்கள் கண்டு பக்திபரவசத்துடன் சுவாமி நம்மாழ்வாரை சேவித்தனா்.