நிலக்கோட்டை அருகே,வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில்,ஒன்றிய கவுன்சிலர் மராமத்து நிதியில் முறைகேடு, 1.80 இலட்சம் மதிப்பில் மராமத்து செய்யபட்ட கலையரங்கத்தில் மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்த டைல்ஸ்களால் பொதுமக்கள் அச்சம்…
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் எதிரே சுமார் 15-ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருந்தவெளி கலையரங்கம் ஒன்று உள்ளது.
இந்தக் கலையரங்கத்தை 2023-24, ஆம் நிதி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூபாய் ஒரு லட்சத்து 80-ஆயிரம் செலவில் மராமத்து பணிகல் செய்யப்பட்டது, ஆனால் பணிகளில் தரமில்லாததால் மூன்றே மாதத்தில் கலையரங்க தூண்கள் மற்றும் சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ்கள் உதிர்ந்து, தானாக உடைந்து கீழே விழுந்ததுள்ளது,பெயரளவில் செய்யப்பட்ட இந்த பணிகளால் மூன்று மாதத்தில் சேதம் அடைந்ததால், அரசு நிதி ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீணடிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், மேலும் அரசு பள்ளி அருகே இக்கலையரங்கம் உள்ளதால், பள்ளி மாணவ மாணவிகள் இக்கலையரங்கில் அமர்வதாக கூறப்படுகிறது. தற்போது, பள்ளிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் அமராத பட்சத்தில், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மராமத்து பணியால் சேதம் அடைந்து காணப்படும் இந்த கலையரங்கில் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் அமர அச்சத்துடன் உள்ளனர்.
எனவே இக்கலையரங்கத்தை மராமத்து பணி பார்த்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும், இப்பணிக்காக தமிழக அரசு வழங்கிய பொது நிதி ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை திரும்ப பெற வேண்டும் என, கிராம பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் இதுபோன்று செய்யப்பட்டுள்ள தரமற்ற பணிகளை, அரசு மாவட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.