வேறு பெண்ணிடம் காதல் கொண்ட காதலன்- இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாக்குவாதம் முற்றுயதால் மனமுடைந்த காதலி பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை முயற்சி- படுகாயம் அடைந்த இருவரும் உயிர் காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் 24 இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இவரும் கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகளும் மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சிந்துஜா.22. என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டதால் சிந்துஜாவிடம் பேசுவது மற்றும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று பூம்புகாரில் இருந்த ஆகாஷை தேடிச் சென்று சந்தித்து பேசிய சிந்துஜா அவருடன் டூவீலரில் பயணித்துள்ளார்.
மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது தன்னை காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். அந்த தீ இருசக்கர வாகனத்தை ஓட்டுச் சென்ற காதலன் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீ காயங்களுடன் கீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது