in

கண்ணுக்குத் தெரியாமல் இவ்வளவு உதவியா மகிழ்ச்சியில் பழங்குடியின இருளர் மக்கள்

கண்ணுக்குத் தெரியாமல் இவ்வளவு உதவியா மகிழ்ச்சியில் பழங்குடியின இருளர் மக்கள்

 

யாரு சாமி நீ எங்க இருக்க கண்ணுக்குத் தெரியாமல் இவ்வளவு உதவியா மகிழ்ச்சியில் பழங்குடியின இருளர் மக்கள்.

குடியரசு தின விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் இருந்து சிதம்பரம் அழைத்து வந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய வைத்து, விலை தேவையில்லை உடை எந்த வகையாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி உயர்தர உணவகத்தில் சாப்பிட வைத்த உங்களுக்கு நன்றி நெகிழ்ச்சி சம்பவம்.

இன்று இந்திய நாடே கொண்டாடும் குடியரசு தின விழா மிக விமர்சையாக கோலாகலமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தை சேர்ந்த சபாநாயகம் என்பவர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் மக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை வாகனம் மூலம் அழைத்து வந்து சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய வைத்து மகிழ்ச்சியடைய செய்தார்.

பின்னர் சிதம்பரத்தில் மிகப்பெரிய ஜவுளி கடையில் விலை தேவையில்லை தேவையான ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் இருளர் இன மக்கள் தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்ட பிறகு செல்வந்தர்கள் உணவருந்தும் சைவ உணவகத்திற்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே கேட்டு சாப்பிட வைத்து அவர்களுக்கு தேவையான போர்வை பள்ளிக்கு செல்வதற்கு பேக் புத்தாடைகள் அனைத்தையும் அவர் இல்லாமல் நண்பர்கள் மூலம் வழங்கி உள்ளது பழங்குடியின இருளர் மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

பழனி முருகன் கோயிலில் 46 லட்சம் செலவில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நூறாவது ஆண்டை அடையும் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி