in

நடிகை படத்தை போட்டு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்


Watch – YouTube Click

நடிகை படத்தை போட்டு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்

முதல் பெண் டாக்டர் படத்திற்கு பதிலாக நடிகையின் படத்தை தவறாக வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார் மந்திரி ஒருவர்.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே அஞ்சலி செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டின பெண் முதல் டாக்டரான ஆனந்தி ஜோஷி மும்பையை சேர்ந்தவர் இவர் அமெரிக்காவுக்கு சென்று மருத்துவம் படித்தார் அவரது நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

அரசியல் பிரபலங்கள் ஆனந்தி ஜோஷியின் நினைவு நாளை ஒட்டி சமூக வலைத்தளத்தில் அவருக்கு அஞ்சலி தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி நாராயண் ரானேவும் ஆனந்தி ஜோஷிக்கு வலைத்தளத்தில் அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் அவர் ஆனந்தி ஜோசியின் படத்திற்கு பதிலாக ஆனந்தி கோபால் என்ற மராத்தி படத்தில் நடித்த நடிகை பாக்யஸ்ரீ மிலிந்த் படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

இப்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து ஆனந்தி ஜோஷி யார் என்று கூட தெரியாமல் அஞ்சலி செலுத்திய அமைச்சரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். பிறகு 12 மணி நேரம் கழித்து நாராயணன் ரானே பெண் டாக்டருக்கு பதிலாக நடிகை படத்தை போட்டு இருந்த அஞ்சலி பதிவை நீக்கினார்.


Watch – YouTube Click

What do you think?

மோடி பாராட்டிய படத்திற்கு தடையா…. சர்ச்சையில் சிக்கிய பிரியாமணி படம்

400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமர்வார் மோடி