பழனி முருகன் கோயில் மலை மீது பெண்கள் வள்ளி கும்மி ஒயில் நடனம்
பழனி முருகன் கோயில் மலைமீது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி ஒயில் நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி செய்ய வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பகுதியை சார்ந்த பாரதி வள்ளிகும்மி ஒயில் நடன குழுவினர் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
மலைமீது உள்ள கிரிவலப்பாதையில் வலம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தை பக்தர்கள் ஒரே மாதிரியான ஆடை அணிந்து வள்ளிக்கும்மி நடனமாடிய படியே கிரிவலம் சென்றனர்.
அப்போது முருகனை போற்றி பக்தி பாடல்கள் பாடியபடி நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து சென்றனர்.