அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்
பட்டுக்கோட்டை அருகே, வெண்டாக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருத்தேர் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வெண்டாக்கோட்டை கிராமத்தில் எங்கும் காண்பதற்கரிய மூர்த்தியாக கையில் வில் அம்பு ஏந்தி, உதிரவேங்கை மரத்தினை ஸ்தல விருஷமாக கொண்டு வேண்டுவோருக்கு வேண்டும் வரமளிக்கும்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு கிராம மக்கள் மற்றும் பக்தர்களால் புதிய வைரத்தேர் செய்யப்பட்டு இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் வெண்டாக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரம் கிராம மக்கள் பெருமளவியில் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.