நாகை அருகே பணம் இரட்டிப்பு தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு. பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்துரை சேர்ந்தவர் குத்துப் தாஹா இவர் நிலா பே என்னும் நிறுவனத்தில் அதிக லாபம் வருவதாக கூறியதால் அதே பகுதியை சேர்ந்த ரிபாயுதீன் என்பவர் மூலம் 3 லட்சத்து 15000 ரூபாய் முதலீடு செய்துள்ளார் அதன்படி சில மாதங்கள் மட்டுமே லாபத்தொகை வந்ததாகவும் அதன் பிறகு சில வருடங்களாக வரவில்லை எனக் கூறப்படுகிறது
இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக கூறி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து குறிப்பிட்ட தினங்களில் பணத்தை திரும்பி தருவதாக ரிபாயுதீன் போலீசார் முன்னிலையில் எழுதி கொடுத்த நிலையில் 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருவதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்துள்ளார் ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டியவர் உடனடியாக பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவதாக அவர் எச்சரித்துள்ளார்