in

அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து திருவிழா கொண்டாடிய கிராமத்தினர்


Watch – YouTube Click

அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து திருவிழா கொண்டாடிய கிராமத்தினர்,நிலக்கோட்டை அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் 400-ஆண்டு பழமையான காளியம்மன்,பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூங்கராத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400-ஆண்டுகள் பழமையான காளியம்மன்,பகவதியம்மன் கோவில் உள்ளது,ஊரின் காவல் தெய்வமான இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம், அதேபோல இந்த ஆண்டும் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழா நேற்று முதல் வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது,

விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார், தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு,தீசட்டி, பால்குடம் எடுத்து நேற்றிக் கடன் செலுத்தினர்,அதனை தொடர்ந்து மாலை பொங்கல் வைக்கும்,கிடாய்வெட்டும் வைபவமும் நடைபெற்றது,

இத்திருவிழாவில் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் அம்மனுக்கே ஆதார் கார்டு அடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அணைவரின் கவனத்தையும் ஈர்த்தது,மேலும் திருவிழாவில் இரவு நடந்த கலைநிகழ்ச்சியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை தத்துருவமாக செய்து காண்பித்தது, பக்தர்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது

மேலும் இத்திருவிழாவிற்கு சென்னை, மதுரை,கோவை,தேனி,நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டினர் ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்


Watch – YouTube Click

What do you think?

சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள, மக்காச்சோளம் சோடை போனதால், விவசாயிகள் கவலை

மகளிர் அணி சார்பில் நீவாங்க மகளிர் அணி சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள்