திருக்குறுங்குடி ஸ்ரீ ஸ்வாமி அழகிய நம்பிராயா் திருப்பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவ விழா
திருக்குறுங்குடி ஸ்ரீ ஸ்வாமி அழகிய நம்பிராயா் தேவஸ்தானத்தில் திருப்பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவ விழாவில் 7ம் நாள் புஷ் பல்லாக்கு. திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் பாண்டியநாட்டில் 18 திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலையாய திருத்தலமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் ஸ்ரீ ஸ்வாமி அழகிய நம்பிராயா் திருக்கோயில் விளங்குகிறது. சுமாா் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் நம்பி என்ற திருநாமத்துடன் 5 நிலைகளில் அருள்பாலித்து வருகின்றாா். வரலாற்று சிறப்பு மிக்க இந்த திவ்ய தேசத்தில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவம் திருக்குறுங்குடி பேரருளாளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் கடந்த 15ம் தேதி சிறப்பாக தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தினமும் காலை வெள்ளி தோளுக்கிணியானில் பெருமாள் புறப்பாடு மதியம் உபயதார் திருமஞ்சனம் மாலையில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரபாிபூா்ணா் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது. விழாவில் 7ம் திருநாளான நேற்று இரவு புஷ்ப பல்லாக்கு வாகன புறப்பாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம் செய்தாா். முன்னதாக திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் திருக்குறுங்குடி மடத்திற்கு ஏழுந்தருளினாா். அங்கு திருக்குறுங்குடி ஜீயா் சுவாமிகளும் திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகளும் வணங்கி மகிழ்நதனா்.
தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்காிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கின் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரபாிபூா்ண நம்பி சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்தாா். பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் 2 ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. புஷ்ப பல்லக்கின் உபயதாரரான TVS கிரெடிட் லிட் சென்னை திரு.வேணுஸ்ரீனிவாசன் க்கும் மாலை மாியாதை செய்யப்பட்டது.
அதனை தொடா்ந்து இரண்டு ஜீயா் சுவாமிகள் ஆச்சாாா்ய புருஷா்களின் மற்றும் பிரபந்ததாரா்கள் திருவாய்மொழி பாராயணத்துடன் யானை முன்னே செல்ல வீதி புறப்பாடு நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் புஷ்ப பல்லக்கு வாகன சேலையை தாிசனம் செய்தனா். விழாவின் சிகர நிகழ்வான 10ம் திருநாள் வருகின்ற 24ம் தேதி அன்று திருத்தோ் வைபவமும் சிறப்பாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்குறங்குடி ஜீயா் மடம் மற்றும் அழகிய நம்பிராயா் தேவஸ்தானம் செய்திருந்தனா்.