பழனியில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம்
பழனியில் இன்று முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து சண்முக நதி, இடும்பன் மலை, சரவண பொய்கை போன்ற புனித நதிகளில் நீராடி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் முருகப்பெருமான் வெள்ளி மயில், தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா , வெள்ளி காமதேனு போன்ற அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார் இன்று 6 ஆம் திருவிழாவான இன்று முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் இன்று மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து நாளை தைப்பூசத்தை திருவிழா மாலை நான்கு முப்பது மணிக்கு திரு தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வருகை தந்து சண்முக நதி , இடும்பன்குளம், சரவணப் பொய்கை போன்ற நதிகளில் புனித நீராடி விட்டு பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள வருகை புரிந்துள்ளதால் பாதுகாப்பு பணியில் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.