in

பெண்ணின் செயல் எனது மனதை வென்றுவிட்டது

பெண்ணின் செயல் எனது மனதை வென்றுவிட்டது

 

முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

இவர் தற்பொழுது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய பொழுது நடந்த சம்பவத்தை தனது வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நியூயார்க் செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு நான் காரில் சென்ற பொழுது ஒரு பெண் கொய்யாப்பழம் வித்து கொண்டிருந்தார் விலை கேட்டபோது 150 ரூபாய் என்று கூறினார்.

நானும் பழங்களை வாங்கிக் கொண்டு 200 ரூபாய் கொடுத்தேன் மீதி பணம் வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன் அவரோ வேண்டாம் என்று மறந்துவிட்டு 50 ரூபாய்க்கு மேலும் இரண்டு பழங்களை என்னிடம் கொடுத்தார்.

பழங்களை விற்று தான் அவருடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டும் ஆனால் மற்றவருடைய உதவியை அவர் எதிர்பார்க்கவில்லை அந்த பெண்ணின் செயல் எனது மனதை வென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

What do you think?

மே மாதம் 72 ஆவது உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது

நடிகை ரேவதி தனது சினிமா அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்