உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்கார தங்க கவசம்
உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பங்குனி மாத சனிக்கிழமையை மற்றும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்.
நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில் எதிரே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை வெட்ட வெயில் மழை பாராமல், வெயில் பாராமல் இருகரம் கூப்பி வணங்கி நிற்கும் 18 அடி ஒற்றைகல்லிலால் ஆன உலக புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் பங்குனி மாத சனிக்கிழமையை மற்றும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்ட பின் காலை 10.00 மணிக்கு பட்டாச்சாரியார்கள் நல்லெண்நெய்காப்பு, பஞ்சாமிர்தம் , பால் தயிர் மஞ்சள் சந்தனம், சொர்ணம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு உட்பட பல மாநில, வெளிநாடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.