in

அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கொத்தாக அள்ளிய போலீஸ்


Watch – YouTube Click

அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கொத்தாக அள்ளிய போலீஸ்

 

பைக் ரேஸ் இல் ஈடுபடுவதற்காக அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி அமைத்து கேக் வெட்டி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள் கொத்தாக அள்ளிய போலீஸ், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் ஒரு இருசக்கர மெக்கானிக் பட்டறையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருப்பதி அப்பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது ஒரு இருசக்கர வாகனத்தின் அருகே கேக் வெட்டி பட்டாசுகள் வெடித்து இளைஞர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது இருசக்கர வாகனங்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் சைலன்சர் பகுதியை மாற்றி அமைத்து, வேகமான முறையில் சப்தம் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டதும் தடை செய்யப்பட்ட ஹாரன்களை உபயோகம் செய்ததும் தெரிய வந்தது தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் பெரும்பாலானவர்கள் படிக்கும் மாணவர்கள் என்பதால் அவர்களது விபரங்களை சேகரித்து வண்டி சாவிகளை வாங்கிக்கொண்டு பெற்றோரை அழைத்து வந்து உரிய விளக்கம் அளித்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

இவர்கள் புது வண்டியை தயார் செய்து அதன் மூலம் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததால் பொதுமக்கள் பெரும் அவதி

 உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மதிய உணவு