பால் கேன் வாகனத்தில் இருந்து கேனை திருடி சென்ற வாலிப துரத்தி பிடித்த பொதுமக்கள்
ஆரணி அருகே நிறுத்தி வைக்கபட்ட பால் கேன் வாகனத்தில் இருந்து 8 காலி கேனை திருடி சென்ற வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஆயலவாடி
பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால்
டெண்டர் எடுத்து கேனில் பால் நிரப்பி கொண்டு செல்ல பால் கேன் வாகனத்தை
நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
மேலும் அப்போது மினி ஆட்டோவில் டிப்டாப் ஆசாமி திடிரென வாகனத்தை நிறுத்தி விட்டு சரவணன் என்பவரின் வாகனத்திலிருந்து சுமார் 8 பால் கேனை எடுத்து தனது வாகனத்தில் வைத்து தப்பியோடிவிட்டார்.
இதனை கண்ட பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று ஆரணி
வந்தவாசி சாலை கருங்கதாங்கல் கிராமம் கூட்ரோடு அருகே மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஆரணி தாலுக்கா போலீசில் ஓப்படைத்தனர்.
பின்னர் போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ஷேக்உமர் மகன் மாலிக்(24) என்பதும் இவன் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்வதும் தற்போது மினி ஆட்டோ கடனில் வாங்கியதால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டபடுவதாகவும் இதனால்
திருட முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தன.
இதனையொடுத்து பால் கேன் உரிமையாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி
முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.