in

கடலூர் பாதிரிக்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

கடலூர் பாதிரிக்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜர் திருக்கோவிலில் கடந்த பங்குனி மாதம் 16 ஆம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தினமும் சுவாமி வீதி புறப்பாடுகளும், திருக்கல்யாணம் மற்றும் கரகதிருவிழாவும் சிறப்பாக நடந்தேறியது. இதில் முக்கிய நிகழ்வான தீமிதிதிருவிழாவானது நேற்று மாலை சக்தி கரகம் புறப்பட்டு வீதி உலாவாக ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நாளை ஞாயிறுகிழமை தெப்பல் உற்சவமும் அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை பட்டாபிஷேகம் நடைபெறள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பெருமாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் ஐதீக விழா

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்