பெரியூர் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா தீர்த்த குடம் ஊர்வலம்
நாமக்கல் அருகேபழைமை வாய்ந்த பெரியூர் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா தீர்த்த குடம் ஊர்வலம் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள பெரியூர் மருதகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஒரு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயில் கட்டிட பணிகள் முடிந்த நிலையில் தங்க முலாம் மூலம் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திர்த்தகுடம் பேரணி நடைபெற்றது.
பேரணியில் கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் அம்மன் வேடமிட்ட உருவம் பக்தி மீசை கச்சேரி ஆகியவைகளுடன் பாரம்பரிய நடனம் வாகனத்தில் நடமாடப்பட்டு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவுதுறை அமைச்சர் அர சக்கரபாணி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர்இந்த பேரணி நாமக்கல் மோகனூர் சாலை ஐயப்பன் கோவிலில் இருந்து திருச்செங்கோடு சாலை வரை சென்றது. இந்த பேரணியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 3000 க்கு மேற்பட்ட பெண்கள் தலையில் தீர்த்தப்படும் சுமந்து மாரியம்மன் குலவை சப்தத்துடன் ஊர்வலம் வந்தனர்.