புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு தீர்த்தம் எடுத்துவரப்பட்டன
திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு தீர்த்தம் எடுத்துவரப்பட்டன.
திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் ஐந்து யானைகளை கொண்டு எடுத்து வரப்பட்டன.
புனித நீரானது 5 சிவாச்சாரியர்களை கொண்டு வேதங்கள் முழங்க மேல தாள கச்சேரியும் முழங்க ஐந்து யானைகள் மீது வைத்து சிவாச்சாரியார்களோடு நான்கு முக்கிய ராஜ வீதிகளை உலா வந்து திருக்கோவிலின் ராஜகோபுரம் வழியாக யாக சாலையை அடைந்தது.
முன்னதாக காவேரி ஆற்றில் சூழப்பாணிக்கு சிறப்பு அபிஷேகம் மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேனு போன்ற திரவியப் போட்டிகளைக் கொண்டு நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம், தம்பிரான் சுவாமிகள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரை ஆட்டம், சிவ வாத்தியம், சிலம்பாட்டம், வாத்தியங்கள், வேதங்ஙள் முழங்க வீதி உலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.