திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பைரவஷ்டமி யாகம்
திருவைரவன்பட்டி அருள்மிகு திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பைரவஷ்டமி யாகம்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே அமைந்துள்ள திருவைரவன்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பைரவஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவர் யாகம் நடைபெற்றது.
முன்னதாக பைரவர் சன்னதி முன்பு பிரம்மாண்ட யாக குண்டம் அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்கரித்தனர்.
பின்னர் கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது யாக பூஜையில் பைரவர் சுவாமி மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கோடி தீபம் கும்ப தீபம் மயில தீபம் யானை சிங்கம் உள்ளிட்ட தீபங்கள் காண்பித்து ஷோடஷ உபசாரங்கள நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஏக முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் சுவாமி அம்மனை வழிபட்டனர்.