நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் பங்குனிமாத தேய்பிறை பஞ்சமி
நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் பங்குனிமாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம், தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.
நாமக்கல் மாநகர் இரயில் நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ மஹாவாராகி அம்மன் கோவிலில் பங்குனிமாத தேய்பிறை பஞ்சமிவிழாவை முன்னிட்டு இன்றுஉற்சவர் வாராகி அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு.
பின் அலங்காரம் செய்யப்பட்டு மலர்கலால் அர்ச்சனை செய்த பின் பஞ்ச தீபம் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளாமானவர்கள் கலந்துகொண்டனர்.அப்போது பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருக்கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வருவதால் உற்சவருக்கு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.