தமிழ்நாடு போலிஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநராக தேன்மொழி ஐ பி எஸ்
தமிழ்நாடு போலிஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநராக தேன்மொழி ஐ.பி.எஸ். நியமிக்கபட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி,/ ஐ.ஜியாக இருந்த, தேன்மொழி ஐ.பி.எஸ் அதிகாரியை, போலிஸ் அகாடமியின், கூடுதல் இயக்குநராக, நியமித்து தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
இவர் , 2000 – 2001 -ம் ஆண்டு,தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு,ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிபபோது, கள்ளசாராயத்தை முற்றிலும்,ஒழித்தமைக்காக இவருக்கு தமிழக அரசு உத்தமர் காந்தி விருது வழங்கி கவுரவித்தது.
இதுகுறித்து நமது Britain Tamil Broadcasting சிறப்பு பார்வையில் பார்ப்போம்.
TNPA என்று அழைக்கபடும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி, வண்டலூர் ஊனமஞ்சேரியில் 129 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்த அகாடமியை பொறுத்தவரை, பயிற்சி போலிஸ் அதிகாரிகளுக்கு,
அறிவு,திறன் போன்ற மதிப்புகளை பயிற்சியில் உணர்த்துகிறது.
மேலும், பயிற்சி காவல் அதிகாரிகளுக்கு, பொதுமக்களுக்கு மிக உயர்ந்த
தரமானசேவைகள் வழங்கவும் காவல் நல்லாட்சியை இலக்குகளை அடையவும் அறிவுறுத்துகிறது.
மேலும், மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான, திறன்களையும் அளிக்கிறது.
போலீஸ் பயிற்சி கல்லூரி கீழ் இருந்த, போலிஸ் அகாடமி கடந்த 2008 -ல், தனி அமைப்பாக இயங்கும் என்றும், இப்பயிற்சி கல்லூரி முதன்மை அதிகாரி,
இயக்குநர் என அழைக்கபடுவார், என்றும் ஐ.ஜி. அந்தஸ்தில் இருப்பவர் கூடுதல் இயக்குனராக அழைக்கபடுவார் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
தமிழ்நாடு போலிஸ் அகாடமி தனி அமைப்பாக மாறிய பிறகு, முதல் இயக்குனர் என்ற பெருமைகுரியவர் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த அமரேஷ் பூஜாரியே.
தற்போது போலிஸ், கூடுதல் இயக்குநராக, நியமிக்கபட்டுள்ள, தேன்மொழி ஐ.பி.எஸ், தஞ்சாவூரில், நகர காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர், பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., சிபிசிஐடி, ஐ.ஜி என பல காவல், பதவிகளில் திரம்பட செயலாற்றியவர்.
இன்றும் காவல்துறையின் அதிரடி வீரமங்கை என போற்றபடுபவர் தேன்மொழி ஐ.பி.எஸ். இவர் தற்போது தமிழ்நாடு போலீஸ் பயிற்சி அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கபட்டுள்ளார். இவர் தமிழ்நாடுபோலிஸ் அகாடமி பயிற்சி கல்லூரிக்கு புத்துயிர் அளிப்பார் என்றே காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.