தென்பசியார் ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ் வார்த்தல் என்னும் சாகை வார்த்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தென்பசியார் கிராமம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு கிராம பெண்கள் ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பவானி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் விரதமிருந்த பக்தர்கள் வேப்பிலையே ஆடையாக அணிந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து சக்தி கரகம் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து தீ கொண்டத்தில் முதலில் இறங்கியது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் டி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.