in

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் தெப்ப உற்சவம்

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 3 நவதிருப்பதி பெருமாள்கள் ஒரே தெப்பத்தில் பவனி. திரளான பக்தர்கள் தாிசனம்..

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவத்திருப்பதி ஸ்தலங்களில் முதலாவது ஸ்தலமாக விளங்குகிறது ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோவில். இத் திருக்கோயிலில் தை தெப்ப திருவிழா 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதற்காக கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நாள்தோறும் உற்சவா் சுவாமி கள்ளா்பிரான் திருக்கோயிலுக்குள் புறப்பாடு நடைபெற்றது. 10ம் திருநாளான இன்று தெப்பத்திருவிழா நடைபெற்றத. இதற்காக ஸ்ரீ கள்ளபிரான் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காலை சந்திகள் நடைபெற்றன. நம்மாழ்வாா் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்தபடி ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளா்பிரான், நத்தம் அருள்மிகு எம்இடா்கடிவான் , திருப்புளியங்குடி அருள்மிகு காய்சினிவேந்தப் பெருமாள் என மூன்று உற்சவா்கள் திருக்கோயில் மகா மண்டபத்திற்கு ஏழுந்தருள சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவில் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் நத்தம் ஸ்ரீ எம்இடர்கடிவான் , திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்தபெருமாள் ஆகிய மூர்த்திகள் தங்கள் தேவியருடன் தெப்பத்திற்கு எழுந்தளுரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலா்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காிக்கப்பட்ட தெப்பத்தில் தாயாா்கள் சமேத பெருமாளை எழுந்தருளச் செய்தனர்.

கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் தெப்பம் மங்கல வாத்யங்கள் முழுங்க 3 முறை வலம் வந்தது. ஏராளமான பக்தா்கள் தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டனா். வாணவேடிக்கைகள் நடைபெற்றன. நாளை இரவில் சுவாமி கள்ளபிரான் மோகினி திருக்கோலத்தில் ஏழுந்தருளலுடன் தெப்ப உற்சவம் நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

What do you think?

100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்கள்

மாசி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை