in

கருகிய நெற்பயிர்கள் உடன் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

தஞ்சை மாவட்டம் திருலோகியில் கண்டியன் பழவாற்றில் விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விடக் கோரி கருகிய நெற்பயிர்கள் உடன் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

காவிரி டெல்டா பகுதியில் ஒன்றான தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருலோகியில் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் இருந்து வந்த கண்டியன் பழவாற்றின் மூலம் இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாயம் செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த பாசன ஆற்றில் தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் கவலை அடைந்து பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வந்தனர். குறிப்பாக இந்த பகுதியில் விவசாயிகள் திருப்பனந்தாள் காசி திருமடத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகை முறையில் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். ஆற்றில் தண்ணீர் வராததால் மின்சார குழாய்கள் மூலம் பயன்படுத்த முயற்சி மேற் கொண்ட போதும் நிலத்திற்கான என்ஓசி சான்றிதழ் பெற வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தி வந்ததால் மழை நீரை வைத்து விவசாய பணிகள் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த நான்காண்டுகளாக கண்டியின் பழவாற்றில் தண்ணீர் வராததால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர் மேலும் தற்போது சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும் மின்சார குழாய்கள் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருயோகி திருப்பனந்தாள் சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்டியன் பலவற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் மேலும் குத்தகை முறையில் உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு மின் இணைப்புகள் பெற திருப்பனந்தாள் காசி திருமடத்திலிருந்து என்ஓசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்

What do you think?

தெறி பட நடிகர் மறைவு

டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்