என்ன அடிச்சிக்க ஆளே இல்ல …டா…மகா நடிகன் விஜய் விஜய் சேதுபதியின் மகாராஜா Review
விஜய் சேதுபதி யின் 50 தாவது படமான மகாராஜா திரைப்படம் ரசிகர்களை ஈர்க்குமா என்ற கேள்வியுடன் படத்தின் review….யை பார்போம்.
இரண்டு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட பட்ட இப்படத்தை பற்றி பாசிட்டிவ் கமெண்ட்சே கொடுத்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முடி திருத்தம் தொழிலாளியாக மகாராஜா என்ற பெயரில் நடித்துள்ளார். இவரது மனைவியாக நடிகை திவ்யா பாரதி சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்துவிடுகிறார்.
தனி ஆளாக தன் மகளை வளர்த்து வருகிறார் விஜய் சேதுபதி இந்நிலையில் திடீரென்று தன் வீட்டில் இருக்கும் லட்சுமி காணவில்லை என்று விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷன் கம்பிளைன்ட் கொடுக்கிறார்.
காணாமல் போன லக்ஷ்மி பணமா மகளா அல்லது பொருளா என்று தெரியாமலேயே போலீஸ் வேட்டையை தொடர்கிறது .
இடைவெளிக்கும் பிறகு வரும் கதையில் போலீஸிலிருந்து தனக்கு வேண்டிய தகவல் எதுக்கும் வராத நிலையில் லட்சுமி கண்டுபிடித்தால் உங்களுக்கு வேண்டிய தொகையை நான் தருகிறேன் என்று விஜய் சேதுபதி கூட அவரை வெளுத்து வாங்குது போலீஸ் ஏன்னா… லக்ஷ்மி ஒரு குப்பை தொட்டி.
வடிவேலு பாணியில் யோசித்தால் சிரிப்பு வரும் ..போலீசாக வரும் நட்டு நடராஜ் லட்சுமியை தேட அதன் பிறகு பல திடுகிடும் தகவல்கள் வெளியாகிறது. திருட்டுத் தொழில் செய்யும் அனுராக் காஷ்யப் திருட செல்லும் இடங்களில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார். கடைசியில் விஜய் சேதுபதிக்கு போலீசார் லட்சுமி கண்டுபிடித்து கொடுத்தார்களா? லட்சுமிக்கும் திருட்டு தொழில் செய்யும் அனுகிரகாஷ் தொடர்பு இருக்கிறதா என்று ட்விஸ்ட்…இக்கு மேல் ட்விஸ்ட்…டாக வைத்து இரண்டாம் பாகத்தை தெறிக்க விடுகிறார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
அண்மையில் விஜய் சேதுபதி நடித்த படங்கள்பாஸ் Mark வாங்காததால் இந்த படத்தை ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் Extraordinary நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவரைத் தாண்டி இப்படத்தில் வரும் சிங்கம் புலி, நாட்டின் நடராஜா, மம்தா மோகன்தாஸ் அபிராமி, பாரதிராஜா என்று அனைவருமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து அருமையாக நடித்திருக்கின்றனர்.
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கதையை இயக்கிய விதம் அருமை. விறுவிறுப்பாக கதையை நகர்த்திய விதத்தில் இயக்குவதில் நான் தான் ராஜா என்பதை மகாராஜா படத்தில் நிரூபித்து விட்டார்.
மொத்த படத்தையும் தனது பின்னணி இசையால் தாங்கிப் பிடித்திருக்கிறார் அஜனீஷ் லோக்நாத். தினேஷ் புருஷோதமனின் ஒளிபதிவால் உயிர் கொடுத்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் என்றாலும் மனதை தொட்டுவிடும் ரகம்.
1915 திரையரங்குகளுக்கும் மேல் ரிலீஸ் ஆகி உள்ள மகாராஜாவுடன் போட்டி போட இந்த வாரம் படங்கள் இல்லாததால் விஜய் சேதுபதி தான் வசூலில் கிங். முதல் நாள் மட்டும் ஒரு கோடி வசூல் செய்யும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.
மைனஸ் … முதல் பாதியில் தோய்வு, லாஜிக் மிஸ்ஸிங், டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.