in

தீயணைப்பு செயல்முறையில் எரிவாயு வெளியேறி அதிகாரிகளின் முகத்தில் பட்டதால் பரபரப்பு


Watch – YouTube Click

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த போது அவரச தீயணைப்பான் எப்படி பயன்படுத்துவது செயல்முறையில் ஈடுபட்ட போது எரிவாயு வெளியேறி அதிகாரிகளின் முகத்தில் பட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம்
கூட்ரோடு அருகில் ஆரணி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன அலுவலகம்
இயங்கி வருகின்றன.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலராக சரவணன் மற்றும் ஆய்வாளராக முருகேசன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஆரணி போளுர் செய்யார் சேத்பட் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் 50
தனியார் பள்ளிகளில் உள்ள பேருந்துகளை இன்று மோட்டார் வாகன அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற வாகன தணிக்கை நிகழ்வில் ஆரணி ஆர்.டி.ஓ
பாலசுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இதில் 50 பள்ளிகளில் உள்ள 353 வாகனங்களை ஆய்வு செய்து போது
முதலுதவி தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி உள்ள 5 வாகனங்கள் ரத்து செய்து மறு ஆய்வுக்கு வர ஆர்.டி.ஓ பாலசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் ஒரு தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போது அவசர தீயணைப்பானை சீராக உள்ளதா செயல்முறையில் ஈடுபட்ட போது அதிகாரிகள் உற்று நோக்கி கொண்டு இருந்தனர்.

அப்போது திடிரென அவசர தீயணைப்பான் உள்ள எரிவாயு வெளியேறி அதிகாரிகள் முகத்தில் விழுந்ததால் அதிகாரிகள் சிலர் சற்று தூரம் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பிளஸ் டூ தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் நிலையத்தில் அறுசுவை விருந்து

தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேட்டி