in

மீண்டும் தெறிக்க வரும் தெறி


Watch – YouTube Click

மீண்டும் தெறிக்க வரும் தெறி

‘தெறி’ திரைப்படம் ஏப்ரல் 14, 2026 அன்று மீண்டும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார்.

தாணு முன்னதாக ‘சச்சின்’ படத்தை தயாரித்திருந்தார், சமிபத்தில் இப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ படத்தை மீண்டும் கொண்டு வருகிறார்.

‘தெறி’ முதலில் ஏப்ரல் 14, 2016 அன்று வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கதில் தாணு தயாரித்த இந்தப் படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்தனர்.

இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு தயாரிப்பு செலவை விட இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்தது. மிகப்பெரிய வெற்றி காரணமாக, இந்தப் படம் சிங்களம் மற்றும் அசாமி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இருப்பினும், இந்தி ரீமேக் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறியது, மேலும் படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெலுங்கு ரீமேக் நிறுத்தப்பட்டது.

‘தெறி’ படம் முதன்முதலில் திரையிடப்பட்ட அதே தேதியில் வெளியிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா

போதைப்பொருள் …. வழக்கில் கைதான ஷைன் டாம் சாக்கோ