in

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயற்சி – தள்ளு, முள்ளு வாக்குவாதம் – செயற்பொறியாளர் காரை மறித்து சாலை மறியல் போராட்டம்

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூரில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் கடைமடைக்கு தண்ணீர் சிறிதளவு மட்டுமே கிடைக்கிறது .வயலுக்கு நீர் பாய்ச்சி சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வாய்க்கால் நீளத்தை பொறுத்து இரண்டில் இருந்து ஐந்து லஸ்கர் இருந்தார்கள்.விவசாயிகள் சாகுபடிக்கு உதவினார்கள். தற்பொழுது லஸ்கர்களோ (ஐஜிகளோ) நீர்வளத் துறை குமாஸ்தாக்களோ இல்லை.

25க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களில் சாக்கடை கழிவுகள் மலத்தை குப்பைகளை விவசாயிகளுக்கு கண்ணீர் வரும் வாய்க்காலில் கொட்டி வாய்க்காலை அழிப்பதுடன் விவசாயிகள் மலத்தை கையில் அள்ள வேண்டி உள்ளது. இதனை கண்டித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததை கண்டித்து நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் மற்றொரு கேட்டை பூட்டு போட சென்றனர். விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீர்வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல விவசாயிகள் முயற்சி செய்த பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு விவசாயிகள் கூச்சலிடட்டனர்.

அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்யானந்தம் வந்த பொழுது அவரது காரை மறித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து விவசாயிகள் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயற்சி செய்தனர்.

பின்னர் விவசாயிகளிடம் வந்து நேரில் செயற்பொறியாளர் நித்யானந்தம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .அப்பொழுது விரைவில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 115 வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.விவசாயிகள் ஒரு சில வாய்க்காலில் தண்ணீர் வந்து வயலுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டதற்கு லஸ்கர் இல்லாததால் பணி நடைபெறவில்லை என குறிப்பிட்டவுடன் அதையும் பார்ப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

What do you think?

பாண்டிச்சேரிக்கு தப்ப முயன்ற பிரபல ரவுடி பட்டரை சுரேஷ் குடும்பத்தோடு கைது

மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை அளித்தனர்மனு