அவதூறு பரப்ப பணம் கொடுகிறார்கள்
நடிகை பூஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது தமிழில் விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் சூர்யாவுடன் ரெட்ரோ படத்திலும் நடித்த வருகிறார்.
இவர் தன் மீது அவதூறு பரப்ப சிலர் பணம் கொடுத்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
எனக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வருகின்றது எனது வளர்ச்சி பிடிக்காமல் என்னை எப்படியும் கீழே தள்ளி விட வேண்டும் என்று சிலர் இதற்காக நிறைய பணம் செலவு செய்கின்றனர். இதனால் எனக்கும் பெற்றோரும் மனஉளைச்சல் ஏற்படுகிறது.
அவதூறு செய்திகளை பரப்புவதற்காகவே லட்சக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர், எனக்கு எதிராக வரும் மீம்ஸ் களை நிறுத்துங்கள் என்று கூறிய பொழுது நீங்களும் அதே அளவிற்கு பணம் கொடுங்கள் நிறுத்தி விடுகிறோம் என்கின்றனர் கேவலம் பணத்திற்காக அடுத்தவர்கள் மீது அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று வேதனையுடன் பதிவிடுள்ளார்’.