சென்னையில் வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேன் .. ன்னு சொன்னாங்க …புது வீடே வாங்கிடேன்…. அறந்தாங்கி நிஷா….
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளர் அறந்தாங்கி நிஷா.
சென்னையில் இவர் நடிக்க வரும் பொழுது வீடு வாடகைக்கு நிறைய இடத்தில் அலைந்திருக்கிறார் முஸ்லிம் என்ற காரணத்திற்காக இவருக்கு வீடு கொடுக்கவில்லை .
விஜய் டிவி பிரபலங்கள் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில் அறந்தாங்கி நிஷாவும் சென்னையில் ஒரு வீடு வாங்கி பால் காய்ச்சி இருக்கிறார். புது வீடு வாங்கியது பற்றி வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்துடனும் சென்னையில் பால் காய்ச்சி விட்டேன்.
இந்த வீட்டுக்கு என் அப்பாவின் பெயரை வைத்திருக்கிறேன் ,ஆறு மாசமா சென்னையில வீடு தேடினேன் ஆர்டிஸ்ட்’ மற்றும் ,முஸ்லி….இக்கு வீடு தர மாட்டேன் ..இன்னு சொல்லிவிட்டாங்க .
அதனால் சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று முடிவு செய்தேன் எல்லோருக்கும் முன்னாடி நாம ஜெயிச்சு காட்டுவதை விட எங்கே தோற்றோமோ அங்கே ஜெயிச்சி காட்டனும்.
என்னுடைய வெற்றிக்கு எப்பவுமே என்னோட குடும்பமும் ரசிகர்களும் தான் காரணம் என்னுடைய வளர்ச்சியை உங்களின் ஒருத்தியின் வளர்ச்சியாக பார்ப்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சி. இறைவனுக்கும், எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.