in ,

நாங்குனோி ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் திருக்கோயிலில் திருஆடிப்பூர சிறப்பு திருமஞ்சனம்

நாங்குனோி ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் திருக்கோயிலில் திருஆடிப்பூர சிறப்பு திருமஞ்சனம்

 

நாங்குனோி ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் திருக்கோயிலில் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு சுவாமி தெய்வநாயகன் ஸ்ரீவரமங்கை ஸ்ரீ ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

வானமாமலை ஸ்ரீ மதுரகவி இராமானுஜ ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம். திரளான பக்தா்கள் சுவாமி தாிசனம்.

108 வைணவ திவ்ய தேசங்களில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நான்குனோி என்னும் வானமாமலை ஒன்றாகும். சிறப்புகள் வாய்ந்த இத் திருத்தலத்தில் பல்வேறு உற்சவங்கள் ஆண்டு முமுவதும் கொண்டாடப்படுகின்றது.

குறிப்பாக ஆடி மாதம் வருகின்ற ஆடிப்பூரத் திருவிழா ஸ்ரீஆண்டாளுக்கு என 10 தினங்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதற்காக வானமாமலை ஸ்ரீ மதுரகவி இராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆசிகளோடு கடந்த 29ம் தேதி துவங்கியது.

ஆடிப்பூர திருவிழாவில் ஸ்ரீ ஆண்டாள் தினமும் பல்வேறு அலங்காரங்களில் ஏழுந்தருளி திருக்கோவில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

ஆடிப்பூர தினமான இன்று காலை ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருள பெருமாள், தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு சாஸ்திர முறைப்படி நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாள், தாயாா்கள் ஸ்ரீவரமங்கை ஸ்ரீஆண்டாள் அருள்பாலித்தனா். வைணப் பொியோா்களால் ஆண்டாள் அருளச் செய்த திருப்பாவை, வாணரமாயிரம், நாச்சியாா் திருமொழி பாடப்பட்டது.

பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்ததும் கோஷ்டி நடைபெற்றது. ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஆண்டாளின் திருஆடிப்பூர நிகழ்வினை திரளான பக்தா்கள் தாிசனம் செய்தனா்.

What do you think?

நெல்லை ஆரெம்கேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா பாரம்பரிய கைத்தறி பொருட்கள் கண்காட்சி

அன்னை காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா