in ,

குத்தாலம் ஓங்காளீஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

குத்தாலம் ஓங்காளீஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

 

பாடல்பெற்றதும்,பழைமை வாய்ந்ததுமான, குத்தாலம் ஓங்காளீஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம், திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழைமை வாய்ந்ததும்,காளிதேவி, சிவனை பூஜித்து சாபவிமோசனம் பெற்ற புராண வரலாறு உடையதுமான ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஓங்காளீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் முதலாம் ஆண்டு சம்பத்ராபிஷேகத்தை முன்னிட்டு, இந்த ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து,யாகசாலை மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அங்கு வேதியர்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, மாங்கல்யதாரணம் நடைபெற்று, திருமண வைபவம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலாவாக எழுந்தருளினர்.

What do you think?

பழைமையான கற்காம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்

தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு