in

கீழ்மாம்பட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

கீழ்மாம்பட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

 

கீழ்மாம்பட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சார் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோவிலின் 24ஆம் ஆண்டு பிரஹ்மோத்ஸவ திருவிழாவும் 15ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தேர் திருவிழா கடந்த 6 ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது இதை முன்னிட்டு ஸ்ரீஅம்மச்சார் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது

இரண்டாம் நாள் திருவிழாவில் 501 பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து மூலவர் , ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீஅம்மச்சார் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் மாகா தீபாரதனையும் நடந்தது.

இதைத் தொடர்ந்து சீனிவாச பெருமாள் கோவிலில்ஸ்ரீதேவி பூதேவி சமேதஸ்ரீசீனுவாச பெருமாளுக்கு திருகல்யாணம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சார்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

Necklace அணிந்து வந்த அலப்பரை பண்ண நடிகர்

திடிரென்று பிரிய முடிவெடுத்த சினிமா ஜோடி… அதிர்ச்சியில் கோடம்பாக்கம்