வோருக்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வீர மகாகாளியம்மன் ஆலயத்தில் 22-ம் ஆண்டு ஆடி திருவிழா முன்னிட்டு அரசு வேம்பு மரத்துக்கு திருக்கல்யாணம்
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகா காளியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா இன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் சாந்த சொரூபியாய் அம்மன் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு யாகம் செய்யப்பட்டனர்.
அரசு வேம்பு இணைந்திருப்பது சிவ சக்தியை வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர் அரசு சிவபெருமானகவும் வேம்பு தேவியின் வடிவமாகவும் கருதப்படுகிறது பொதுவாக அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை அவை தானாகவே ஒன்றிணைந்து வளர்கின்றன. எல்லா இடங்களிலும் அவ்வாறு ஒன்றிணைந்து வளர்வது கிடையாது.
நதிக்கரைகள் மற்றும் தெய்வ சாந்தியம் நிறைந்து இடத்தில் மட்டும் தான் ஒன்றிணைந்து வளரும் அரசும் வேம்பும் இணைந்து இருக்கிற அந்த குறிப்பிட்ட இடம் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகத் நிகழ்கிறது.இவை இரண்டுக்கும் திருக்கல்யாணம் செய்வித்து வழிபடுவதன் மூலம் சிறப்பு என்பதால் இவ்ஆலயத்தில் இன்று அரசு வேம்பு மரத்துக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பெண்கள் மாவிளக்கேற்றியும் எண்ணெய் தீபமேற்றியும் மனமுருகி வேண்டி வழிபாடு நடத்தினர் குழந்தை பெரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், திருமண தடை உள்ளவர்களுக்கு,திருமண தடை விலகி திருமணமும் நடைபெறுகிறது என்பது ஐதிகம். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ வீரமா காளியம்மன் விழா குழுவினர்கள் கிராமவாசிகள், தெருவாசிகள்,மாரியம்மன் கோயில், நாடார் இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.