in

பாபநாசம் அருகே ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணருக்கு திருக்கல்யாணம்..

பாபநாசம் அருகே ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணருக்கு திருக்கல்யாணம்..

மங்களப் பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்த பெண்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த களஞ்சேரி கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணருக்கு ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தோடய மங்கலம், குரு கீர்த்தனைகள், அஷ்டபதி ஆகிய பஜனை பாடல்கள் பாடப் பெற்று திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கல்யாண கிருஷ்ணர் திருமண கோலத்தில் காட்சியளிக்க பெண்கள் மங்கல பொருட்களை சீர்வரிசையாக மேளதாளங்கள் முழங்க ஆலயத்திற்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து மாங்கல்யதாரணமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர்.

ஏற்பாடுகளை களஞ்சேரி சீதாராமன், சாம்ப வைத்தியநாதன், பாஸ்கர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

What do you think?

1,039 வது சதய விழாவினை முன்னிட்டு மாணவர்களின் பரதம், குச்சிப்புடி, கோலாட்டம், மயிலாட்டம், சிலம்பம்

காட்டுப்புத்தூர் அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் நான்கு பேர் கைது