பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அண்ணாமலையார் சந்நதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் சாமிவீதி உலாக்களில் பஞ்ச மூர்த்திகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளிப்பார்கள். இந்நிலையில், நாட்டுக்கோட்டை நகரத்தாரால் அண்ணாமலையார் கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட மிகவும் பழமையான நூற்றாண்டை கடந்த வெள்ளி ரதம் 6ம் நாள் இரவு தீப திருவிழாவில் வெள்ளி ரத்தத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதையொட்டி, 117 ஆண்டுகள் பழமையான கலைநயம் மிக்க வெள்ளி ரதத்திற்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 4 லட்சம் மதிப்பீட்டில் 4 இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டு அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழமையான வெள்ளி ரதத்தில் பொருத்தப்பட்ட இரும்பு சக்கரங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வெள்ளி ரதம் இருக்கும் இடத்திலிருந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபம் வரை வெளியே கொண்டுவரப்பட்டு மீண்டும் வெள்ளி ரதம் இருக்கும் மண்டபத்திற்கு வெள்ளி ரத்தத்தை கொண்டு சென்றார்கள்.
இந்நிகழ்வில் அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் டி.வி.எஸ். ராஜாராம், சினம் பெருமாள், நாட்டுக்கோட்டை நகரத்தார் நாராயணன், திருக்கோயில் மிராசு விஜயகுமார் உள்ளிட்டவர்கள் வெள்ளி ரத பூஜையில் கலந்து கொண்டார்கள்