in

சுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு தீபக்காட்சி

சுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு தீபக்காட்சி

 

கும்பகோணம் அருகே முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து எட்டு நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

 

முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை முக்கிய நான்கு வீதிகள் வழியாக திருத்தேர் வட பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

What do you think?

கோவாவில் ஆண்டனி தட்டில்..லை திருமணம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதி விஜய் நேரில் சென்று வாழ்த்தினார்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு