in

திருக்குறுங்குடி ஸ்ரீதிருமலை நம்பி (மலை நம்பி) திருக்கோயில் தெப்ப உற்சவம்

வைணவ திருத்தலமான திருக்குறுங்குடி ஸ்ரீதிருமலை நம்பி (மலை நம்பி) திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம்.

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். சுமாா் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்தலத்தில் நம்பி என்ற திருநாமத்துடன் 5 நிலைகளில் அருள்பாலித்து வருகின்றாா். அதில் மேற்கு தொடா்ச்சி மலையில் திருமலை நம்பி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகின்றாா்.

திருமலைநம்பி தான் திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தாக வரலாறு. வரலாற்று சிறப்பு மிக்க திவ்ய தேசத்தில் திருக்குறுங்குடி பேரருளாளா் இராமானுஜ ஜீயா் சுவாமிகள் நியமனப்படி ஆண்டுதோறும் தை தெப்ப திருவிழா 2 தினங்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. இரண்டாம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீதிருமலை நம்பி (மலை நம்பி) தெப்பம் நடைபெற்றது. இதற்காக காலையில் திருமஞ்சனம் கண்ட மலைநம்பிபெருமாள் இரவில் தங்க தோளுக்கிணியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் கோவிலிருந்து தன் தேவியருடன் எழுந்தருளினார்.

ஜீயா் மடம் முன்பு பெருமாள் தாயாரை வரவேற்று மாியாதை செய்த ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து யானை முன்னே செல்ல பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. ஜீயா் சுவாமிகள் அத்யாபக கோஷ்டியியனா் பொதுமக்கள் உடன்வர தெப்பக்குளத்தை வந்தடைந்தனா். அங்கு பூக்களால் அலங்காிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாளையும் தாயாரையும் எழுந்தருளச் செய்தனர். சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் , தெப்பத்தில் அரையா் வியாக்யானத்துடன் தெப்பம் 12 முறை வலம் வந்தது.ஒவவொரு சுற்றுக்கும் பிரசாதம் நைவேத்யம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டனா். வாணவேடிக்கைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை அழகிய நம்பிராயா் தேவஸ்தானம் செய்திருந்தது.

What do you think?

பாபநாசத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பா ஜ க ஆளும் மாநிலங்களில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை