in

தஞ்சை திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலில் திருமூலநாயனார் குருபூஜை அபிஷேக ஆராதனை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலில் திருமூலநாயனார் குருபூஜை அபிஷேக ஆராதனைகளுடன் நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாத்தனூர் கிராமத்தில் திருமந்திர நூல் அருளிய திருமூல நாயனார் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர் கோயில்களில் ஒன்றானதாக இருக்கக்கூடிய இக்கோயிலில் உள்ள திருமூல நாயனார் குருபூஜை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்களுடன் புறப்பட்டு கோயிலின் மூலவரான திருமூலநாயனாருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து திருமந்திர முற்றோதுதலும், திருமந்திர ஆன்மீக சொற்பொழிவும், திருமூல நாயனாருக்கு சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் பின்னர் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் பேரூர் ஆதீன கட்டளை தம்பிராயன் சுவாமிகள், இந்திய பண்பாட்டு அமைப்பு நிறுவனர் கண்ணனடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

பசுபதிகோவில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் சுவாமி ஆலயம்..

சென்னை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்