திமுக தலைமையிலான கூட்டணி மிக பலமாக உள்ளது கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெரும் என நெல்லையில் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி யின் 88 – வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வ.உ.சி மைதானம் அருகே உள்ள வ.உ.சி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சியினரை நிதி குழு தலைவர் உள்ளிட்டோர் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதிகள், குறைகளை கேட்டறிந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை காக்கும் வகையில் தேவையான நிதிகளை பரிந்துரை செய்ய வேண்டும். அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். நடிகர் விஜய் தர்மபுரியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சி தலைமை வெளியிடவில்லை.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் போது காங்கிரசின் தொண்டராக போட்டியிட்டார். தற்போது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உயர்ந்து நிற்கிறார். வயநாட்டு தொகுதியில் ராகுல் காந்தி இரண்டு முறை போட்டியிட்டு வெற்றியை பெற்றுள்ளார்.
வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தற்போது போட்டியிடும் பிரியங்கா காந்தி அதனை விட அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றியை பெறுவார்.
வயநாட்டு மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு தனி செல்வாக்கு உள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நடிகராக இருந்தாலும் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்களை அங்கீகரிப்பது மக்கள் விருப்பம் நடிகர்கள் கட்சி ஆரம்பித்து பலர் வெற்றியும் பெற்றுள்ளனர் பலர் தோல்வியும் சந்தித்துள்ளனர். நடிகர்கள் கட்சி வெற்றி பெறுவது மக்கள் கையில் உள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி மிக பலமாக உள்ளது கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெரும். எடப்பாடி பழனிச்சாமி கூறுவதுபோல் திமுக கூட்டணியில் விரிசல் என்பதற்கான வாய்ப்பு இல்லை.
எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது வெளி கொண்டு வந்த திட்டங்களுக்கு அவரது பெயரை பெரும்பாலும் சூட்டவில்லை ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்னர் திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டினார் தொடர்ந்து கலைஞர் பெயர் சூட்டப்பட்டது.
திட்டங்களுக்கு பெயர் வைப்பது தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களது பெயரை வைப்பது சகஜமான ஒன்று.
திட்டங்களுக்கு பெயர் வைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விவாதத்திற்கு எடப்பாடி அழைத்துள்ளார் உதயநிதி நான் வருவதாக சொல்லியுள்ளார் அந்த பிரச்சனை இருவருக்குமானது மொத்தத்தில் விவாதம் என்பது நடைபெறாது.
எனக்கான அடையாளத்தை அரசியலில் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். கடவுளுக்கு நிகராக எம்ஜிஆரை கருதுகிறேன் ஒருபோதும் அவருக்கு எதிரான கருத்துக்களை பேசமாட்டேன் பேசப்போவதும் இல்லை என தெரிவித்தார்.