in ,

திருநெல்வேலி ஸ்ரீ குரு ராகவேந்த்ராின் 353 வது ஆராதனை விழா எராளமான பக்தா்கள் தாிசனம்

திருநெல்வேலி ஸ்ரீ குரு ராகவேந்த்ராின் 353 வது ஆராதனை விழா எராளமான பக்தா்கள் தாிசனம்

 

திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்ர சுவாமி மடம் அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில் அலங்கார கிருஷ்ணர் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என மிர்த்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது.

பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த மடமானது மந்த்ராலய மடாலய பீடாதிபகளான ஸ்ரீஸ்ரீ1008 ஸ்ரீ ஸூயுதீந்த்தர தீா்த்தாின் அருளாசியுடன் தற்போததைய மடத்தின் பீடாதிபதிகளான ஸ்ரீ புஸூபுதேந்த்ர தீா்த்த சுவாமிகளின் ஆக்ஞையின்படி கடந்த 3 தினங்கள் ஸ்ரீ ராகேந்த்ர ஸ்வாமிகள் ஆராதனை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி நேற்று பூர்வாராதனை ஆரம்பிக்கப்பட்டது. இன்று மத்யாராதனை நடைபெற்றது. மத்யாராதனையில் இன்று காலையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் பிருந்தாவனத்துக்கும் பால் பஞ்சாமிருதம் தேன் இளநீர் மற்றும் கும்பம் வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது. பிருந்தாவனத்தை வெள்ளி கவசம் மற்றும் வாசனை பூக்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து சொா்ண புஷ்பத்தாலும் பூக்களாலும் அா்ச்சனை செய்யப்பட்டது.
அனிருத்தா ப்ரத்யும்னா சங்கர்ஷன வாசுதேவ நாராயணா என பரமாத்வாவின் 5 ருபங்களாக ஆவாகனம் செய்து மரியாதைசெய்யப்பட்டு மஹா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

பக்தா்களால் ஹரிவாயு ஸ்துதி ஸ்ரீராகவேந்திர் ஸ்தோத்திரம் மத்வநாம தாஸர கீர்த்தனைகள் ஹரிகதாம்சசாரம் என பாடல்கள் பாடப்பட்டது. ஏராளமான பக்தா்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீகுரு ராகவேந்திராின் பிருந்தாவனத்தை வணங்கி அருள்பெற்று சென்றனா்.

What do you think?

தண்ணீர் குடிச்சது தப்பா….நடிகை கங்கனா ரனாவத்

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்