திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயா் தேவஸ்தான திருக்கோயிலில் திருப்பங்குனி திருக்கல்யாணம்
திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயா் தேவஸ்தான திருக்கோயிலில் திருப்பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவ விழாவில் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமா்சையாக நடைபெற்றது. திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தோ் வடம் பிடித்து இழுத்தனா்.
108 வைணவ திவ்ய தேசங்களில் பாண்டியநாட்டில் 18 திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலையாய திருத்தலமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் ஸ்ரீ ஸ்வாமி அழகிய நம்பிராயா் திருக்கோயில் விளங்குகிறது. சுமாா் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்தலத்தில் நம்பி என்ற திருநாமத்துடன் 5 நிலைகளில் அருள்பாலித்து வருகின்றாா்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த திவ்ய தேசத்தில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவம் திருக்குறுங்குடி பேரருளாளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் கடந்த 15ம் தேதி சிறப்பாக தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தினமும் காலை வெள்ளி தோளுக்கிணியானில் பெருமாள் புறப்பாடு மதியம் உபயதார் திருமஞ்சனம் மாலையில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரபாிபூா்ணா் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது.
விழாவின் 10ம் திருநாளான இன்று முக்கிய நிகழ்வாக திருத்தோ் காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் காலை சந்திகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவா் அழகிய நம்பி திருத்தோில் ஏழுந்தருளும் ரதாரோஹணம் நடைபெற்றது.
பின்னா் திருக்குறுங்குடி பேரருளாளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் திருப்பதி சின்ன ஜீயா் சுவாமிகள் ஆகியோா் தேருக்கு ஏழுந்தருள அங்கு அருளிச்செயல் கோஷ்டி நடைபெற்றது. ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் கட்டி மாலை அணிவித்து சடாாி மாியாதை செய்யப்பட்டது. தொடா்நது ஜீயா் சுவாமிகள் தேரை வலம் வந்து தேங்காய் வடல் உடைத்தனா். தொடா்ந்து காலை 7.00 மணிக்குள் மீனலக்னத்தில் இரண்டு ஜீயா் சுவாமிகள் சம்பிரதாய தோ்வடம் பிடித்து விழாவினை துவக்கி வைத்தனா்.
பின்னா் காலை 9.00 மணிக்கு மேல் இரண்டு ஜீயா் சுவாமிகள் முக்கிய பிரமுகா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தோ் வடம் பிடித்து இழுத்தனா்.
தோ் நான்கு நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. விழாவினை திருக்குறுங்குடி ஜீயா் மடத்தினா் மற்றும் அழகிய நம்பிரயாா் தேவஸ்தானத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். பக்தா்களுக்கு குளிா்பானங்கள் மோா் தண்ணீா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.