நாமக்கல் பரமத்திவேலூர் மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு 3 நேற்று வெள்ளிக்கிழமலை இரவு 201 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக மேடையின் மீது உற்சவர் மாரியம்மனை எழுந்தருள் செய்து 3 குத்து விளக்கினை மூன்று தேவியராக அலங்கரித்து 201 குத்துவிளகளுக்கும் பூஜைகள் செய்து நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மூலவர் மகா மாரியம்மனுக்கு உதிரிப்பு அர்ச்சனை செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை வேலூர் மகா மாரியம்மன் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.