திருவிழந்தூர் மகாகாளியம்மன் ஆலய 151 வது ஆண்டு தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் இராஜா தெருவில் அமைந்துள்ளது மிக பழைமையான மகாகாளியம்மன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் மாசி மாதத்தை ஒட்டி 151 வது ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையிலிருந்து புறப்பட்ட கரகம், காவடிகள், பம்பை உடுக்கை மேள தாளம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஆங்காங்கு பக்தர்கள் வீடுகளில் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
பின் தீ குண்டத்தின் முன் புஷ்ப பல்லக்கில் மகாகாளியம்மன் வீற்றிருக்க, கரகம், காவடி எடுத்து வந்த பக்தர்களும், வேண்டுதலை நிறைவேற்ற காப்பு கட்டிய பக்தர்களும் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.
இந்த தீமிதி திருவிழாவை ஆயிரகனக்கில் பக்தர்கள் கண்டு களித்து அம்மனின் அருளை பெற்றனர்.