தேர்தல் பத்திரம் ஊழலை திசை திருப்பவே கச்சத்தீவு பற்றி பேசுகிறது பாஜக: இதுதான் என்னுடைய தேர்தல் கடைசி பயணம் தமிழ்நாட்டிற்கு என நெல்லையில் மோடி பேசியதை அவர் பேசிய ஒரே உண்மை இதுதான் என நாகையில் திராவிட கழக தலைவர் கி வீரமணி விமர்சனம்
நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வை செல்வராஜை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு திராவிட கழக தலைவர் கி வீரமணி பங்கேற்று கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
தொடர்ந்து பேசிய அவர் 10 ஆண்டு காலமாக கட்ச தீவு பற்றி பேசாத பாஜக அரசு தேர்தல் பத்திரம் ஊழலை திசை திருப்பவே தற்போது கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது எனவும் நெல்லைக்கு வந்தது கடைசி பயணமாக இந்த தேர்தல் பயணத்தை கேட்டுக்கொள்கிறேன் என மோடி பேசினார் அவர் பேசிய ஒரே உண்மை இதுதான் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலும் கடைசி பயணம் என விமர்சனம் செய்தார்.
நாட்டில் இப்போது போட்டியே வெறுப்பு அரசியலா..! பொறுப்பு அரசியலா..!
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமா? இல்லை உயர் ஜாதியினர் அல்லது பெரும் முதலாளிகளுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டுமா என மக்களே இந்த தேர்தலில் முடிவு செய்ய வேண்டும் எனவும்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜுக்கு கதிர் அருவாள் சின்னத்தின் பொத்தானை அமுக்கினால் பச்சை விளக்கு எரியும் அப்போது அங்கு மட்டும் விளக்கு எரியாது உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும் நாட்டிலும் விளக்கு எரியும் இதனால் இருள் விளக்கம் எனவும் இதனால் இந்தியா கூட்டணி ஆட்சி சிறப்பாக அமையும் என அவர் தெரிவித்தார்