எதிர்நீச்சல் சீரியல் அவசரமாக முடிய இது தான் காரணம் …பம்பாய் ஞானம் பேட்டி
சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட எதிர்நீச்சல் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் கடந்த எட்டாம் தேதி அந்த சீரியளுக்கு எண்டு கார்டு போட்டாலும் போட்டார்.
ஏன் சீரியலை முடிச்சிங்க…ன்னு ஆள்ளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க ஏன்னா?
சீரியலில் சொல்லப்பட்ட பல சிக்கல்களுக்கு பதில் கொடுக்காமலேயே சீரியல் முடிக்கப்பட்டது. எல்லோர் மனதையும் குடையும் கேள்விக்கு பாம்பே ஞானம் பதில் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் பாம்பே ஞானம் நடித்தார். இந்த சீரியல் தொடங்கிய காலத்தில் இருந்து மக்கள் அதிகம் வரவேற்பு கொடுத்தனர்.
ஆனால் குணசேகரன் இறந்த பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு ஆளை இயக்குனராலும், மக்களாலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மக்களால் வேல ராமமூர்த்தியை குணசேகரன் கேரக்டருக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் பல நெகடிவ் comments கள் வர ஆரம்பித்தது.
அதனால் கதையின் கோணமே மாறியதால் டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்து விட்டது. சீரியலை எடுத்துக் கொண்டு போவதற்கு சரியான கேரக்டர் அமையாததால் கதையின் கோணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் குழம்பிய இயக்குனர் வேறு நேரத்திற்கு இந்த சீரியலை மாற்றினால் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் கதையிலும் மாற்றம் செய்ய முடியாது என்று வேறு வழி இல்லாமல் இந்த சீரியலை முடிக்கலாம்..இன்னு முடிவு செய்தார்.
சீரியல் முடிக்கப் போகிறோம் என்று கேள்விப்பட்டதிலிருந்து நடிகர்கள் எல்லோரும் தினம் தினம் சூட்டில் அழுது கொண்டுதான் இருந்தார்கள் என்று பாம்பே ஞானம் கூறினார்.