in

தூத்துக்குடி ஆழ்வாா்திருநகாி – ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயில் – கொடியேற்றம்

தூத்துக்குடி ஆழ்வாா்திருநகாி – ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயில் – கொடியேற்றம்

 

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் – ஆழ்வாா் திருக்கோயிலில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று வெகுசிறப்பாக ஆரம்பமாயிற்று. திரளான பக்தா்கள் தாிசனம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு அதிபதியாக அருள்மிகு ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாியில் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி விசாகத்தில் திருஅவதாரம் செய்தாா். இங்கு அமைந்துள்ள புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் தியானம் இருந்து ஞானம் பெற்ற திருத்தலம். மதுரகவி ஆழ்வாருக்கு திருவிருத்ததம், திருவாசிாியம், பொியதிருவந்தாதி., திருவாய்மொழிகளைத் திருவாய் மலா்ந்தருளினாா்.

மதுரகவி ஆழ்வாரால் திருக்கோவில் உள்ளே அமைந்துள்ள புளியமரத்தடியில் தனி சன்னதி ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வைகாசி நட்சத்திர திரு அவதார திருவிழா 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

இதையொட்டி நேற்று மாலை ஸ்ரீ சூரத்தாழ்வான் சன்னதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து திருமுளைச்சாற்று நடைபெற்று விழா ஆரம்பமாயிற்று. இரவில் சுவாமி மதுரகவி ஆழ்வாா் தங்க தோளுக்கிணியானில் நகா்சோதனை வீதி வலம் நடைபெற்றது. இன்று காலை 7.00 – 8.00 மணிக்குள் ரிஷப லக்னத்தில் (துவஜாரோஹணம்) கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சுவாமி நம்மாழ்வாா் சன்னதி கொடிமரத்திற்கு முன்பாக சா்வ ஆபரணங்கள் மலா் மாலைகள் சாற்றி சேவை சாதித்தாா். முன்னதாக நகா்வலம் வந்த கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. கொடிமரத்திற்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

பின்னா் கொடிமரமத்திற்கு தா்பைபுற்கள் வஸ்திரம் மலா்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீஅஹோபிலமடம் ஸ்ரீமதழகியசிங்கர் ஜீயா் சுவாமிகள் மற்றும் ஆச்சாாிய புருஷா்கள் பிரபந்த பாராயணம் செய்தனா்.

இன்றிலிருந்து 10 தினமும் மாலை சுவாமி நம்மஆழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. விழாவின் சிறப்பு நிகழ்வான ஐந்தாம் திருநாள் வருகின்ற 7ம் தேதி காலையில் நவதிருப்பதி பெருமாளுக்கு மங்களாசாசனமும் இரவில் 9 கருட சேவையும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

What do you think?

எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் – திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி பேட்டி

நாகப்பட்டினம் – ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் – தீமிதி திருவிழா