சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்
நடிகர் விஜய் சேதுபதி போல கொஞ்சம் கொஞ்சமாக கீழ்தட்டில் இருந்து நடிகர் அந்தஸ்துக்கு வந்திருக்கும்.
இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். பின்னர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வாய்ப்பு கிடைத்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்து தற்பொழுது சிறு சிறு வேடத்தில் தலைகாட்டி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.
இவர் காலா, விக்ரம் வேதா, ஜெய் பீம், குட் நைட் போன்ற படங்களில் நடித்தவர். சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்என்றார்.
என் அம்மா தினமும் சாப்பாடு போட்டு அழுவாங்க பக்கத்துல இருக்குற பையன்கள் எல்லாம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறாங்க, நாம எப்போ முப்பதாயிரம் சம்பாதிப்போம் என்ற சிந்தனையில் நினைத்து நினைத்து அழுவார்கள்.
நமக்கானதை தேடி நாம் அலைய மாட்டோம் தொடர்ந்து அதற்காக முயற்சி செய்தால் நிச்சயம் பெரிய விஷயம் நம்மை தேடி வரும் என்று சமீபத்தில் மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான குட் நைட் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ‘லால் சலாம்’ படத்துக்கு போட்டியாக ‘லவ்வர்’ படத்தின் ரிலீஸ்காக காத்திருக்கிறார்.
பல படங்களில் அவர் நடித்தாலும் ஜெய் பீம் என்ற படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசியம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடதகுந்தது.